இலங்கை ரூபாயில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (29) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.95 ரூபாயாகவும், கொள்வனவு விலை 291.52 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலரின் விற்பனை விலை 221.81 ரூபாயாகவும், கொள்வனவு விலை 212.32 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 324.18 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 310.93 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 378.47 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 363.69 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.