பாடசாலை சிற்றுண்டிச்சாலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
அனைத்து பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளையும் பரிசோதிக்கவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

அனைத்து பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளையும் பரிசோதிக்கவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பாடசாலைகளில் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பாடசாலை உணவகக் கொள்கை முழுமையான சட்ட ஆவணமாக இல்லாவிட்டாலும், சிற்றுண்டிச்சாலைகளில் மாணவர்களுக்கு தேவையற்ற உணவுகள் வழங்கப்படுவதால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதைக் காணக்கூடியதாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், “சிற்றுண்டிச்சாலைகளில் விற்கப்படும் உணவுகள் குறித்து வழிகாட்டு நெறிமுறை சுற்றறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. இது தேசிய பாடசாலை சிற்றுண்டிச்சாலை கொள்கையாக வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளை நடத்துவோருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை மீறி செயற்பட்டால் உணவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்வது பிரச்சினையாக இருந்தாலும், பாடசாலை மாணவர்களின் உடல் நலனில் விபரீதம் ஏற்படுத்தும் எந்த விடயத்திலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்" என்றார்.