உலகக்கிண்ண கிரிக்கெட் - இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக நியமனம்

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

செப்டெம்பர் 20, 2023 - 19:32
உலகக்கிண்ண கிரிக்கெட் - இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக நியமனம்

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையில் நடைபெற்ற தெரிவு குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அண்மை காலமாக தசுன் ஷானகவின் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க தவறிய நிலையில் அணிமையில் நடைபெற்ற ஆசிய கிண்ண தொடரில் அவர் பெற்ற ஓட்டங்கள் 60க்கும் குறைவாகும்.

கடந்த காலங்களில் 13 ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை பதிவு செய்யத இலங்கை அணி ஆசிய கிண்ண இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டு சகல விக்கெட்டுகளையும் இழந்து 50 ஓட்டங்களை மாத்திரமே பெற்று மிகவும் மோசமான ஒரு தோல்வியை பதிவு செய்தது.

இந்த தோல்வி இலங்கை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, தசுன் ஷானகவின் தலைமை தொடர்பில் பலரும் விமர்சனங்கள் வெளியிட நிலையில் அவரை எதிர்வரும் உலக கிண்ண இலங்கை அணிக்கான தலைவராக இலங்கை கிரிக்கெட் சபை நியமித்துள்ளது.

மேலும், இலங்கை பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அணியை இன்னும் அறிவிக்கவில்லை.

எதிர்வரும் ஒக்டோபர் ஐந்தாம் திகதி ஆரம்பமாகவுள்ள உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளின் வீரர்களின் பெயர் பட்டியல் மற்றும் மாற்றம் தொடர்பில் அறிவிக்க ஐ.சி.சி எதிர்வரும் 28 வரை அணிகளுக்கு கால எல்லை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ICC Men's Cricket World Cup 2023

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!