ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம்; நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
கொழும்பில் இன்று (30) முன்னெடுக்கப்படவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று (30) முன்னெடுக்கப்படவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாளிகாவத்தையில் வீதிகளை மறித்து போக்குவரத்து மற்றும் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டங்களை நடத்த தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாளிகாவத்தை முஸ்லிம் மயானத்திற்கு அருகில் அரசியல் கட்சியொன்றுடன் ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்து போராட்டத்தை தடுக்க உத்தரவிடுமாறு கோரினார்.
இதனையடுத்து, கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளர் முஜிபர் ரஹ்மான் உள்ளிட்டவர்களுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.