கோழி இறைச்சி விலை குறித்து வெளியான அறிவிப்பு
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் மொத்த விலை 200 ரூபாயினால் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோழி இறைச்சி விலை
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் மொத்த விலை 200 ரூபாயினால் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 1450 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
கால்நடைகளுக்கான தீவனங்களின் விலைகள் குறைவடைந்துள்ளமையால் கோழி இறைச்சியின் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
காய்கறிகளின் விலை உயர்வு
இதேவேளை நாட்டில் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.
அண்மையில் பெய்த மழையினால் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக மெனிங் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், பழங்களின் விலையும் அதிகரித்துள்ளது.