கோழி இறைச்சியின் விலை குறைப்பு - வெளியான அறிவிப்பு
இன்று (20) ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் மொத்த விலை 940 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இன்று கோழி இறைச்சியின் விலை 30 ரூபாயினால் குறைந்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (20) ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் மொத்த விலை 940 ரூபாயாக பதிவாகியுள்ளது.
மேலும், புதிய கோழி இறைச்சி 1070 ரூபாயாகவும், தோலுடனான கோழி இறைச்சி 990 ரூபாயாகவும், குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்ட கோழி இறைச்சி 990 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கறிக்கோழி 1050 ரூபாயாகவும், ஆட்டு இறைச்சி 3400 ரூபாயாகவும், மாட்டிறைச்சி 2500 ரூபாயாகவும் விற்கப்பட்டுள்ளது.