மேலும் குறைந்த தங்கம் விலை; வெளியான தகவல்!

தங்கம் விலை: தொடங்கியதில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

செப்டெம்பர் 7, 2023 - 13:07
செப்டெம்பர் 7, 2023 - 13:08
மேலும் குறைந்த தங்கம் விலை; வெளியான தகவல்!

தங்கம் விலை: தொடங்கியதில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 

2022 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் ஒட்டுமொத்தமாக தங்கத்தின் தேவை 135.5 டன்களாக இருந்தது. இந்த அளவு தற்போது 17 சதவீதம் குறைந்து 112.5 டன்களாக உள்ளது. 
விலை சரிவை எதிர்பார்த்து பல்வேறு தரப்பினரும் தங்கத்தில் முதலீடு செய்வதை ஒத்திவைத்ததால் தேவையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,240– க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,530- க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.78.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 78,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!