CCTV கமராவில் கண்காணிப்பு: சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு
போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிப்பதற்காக பொலிஸார் CCTV கமராக்களை பயன்படுத்தவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

2024 ஜனவரி 22 திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பில் போக்குவரத்துக் குற்றங்களைச் சமாளிப்பதற்கான புதிய நடவடிக்கைகளை இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிப்பதற்காக பொலிஸார் CCTV கமராக்களை பயன்படுத்தவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
மேலும், சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றவாளிகளை இனங்கண்டு, அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அபராதத் தாள்கள் வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரின் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்படும் என்று பதில் பொலிஸ் மா அதிபர் தென்னகோன் மேலும் தெரிவித்தார்.