920 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிலரது சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டிசம்பர் 21, 2023 - 15:15
920 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

போதைபொருளை ஒழிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிலரது சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நபர்கள், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்தாக கூறப்படும் ஏராளமான பணம் மற்றும் சொத்துக்களை சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணை பிரிவு அதிகாரிகள் இன்று(21) கைப்பற்றியுள்ளனர்.

03 பஸ்கள், 02 கார்கள், 02 மோட்டார் சைக்கிள்கள் மூன்று மாடி வீடு உட்பட 04 காணிகள், 50 பவுன் தங்கம் மற்றும் 123,000 ரூபாய் பணம் என்பன தற்போது முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு முடக்கப்பட்டுள்ள சொத்து மற்றும் பணத்தின் மதிப்பு சுமார் 920 இலட்சத்துக்கும் அதிகம் என தெரியவந்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!