கம்பஹாவில் பௌத்த பிக்கு சுட்டுக் கொலை

கம்பஹா மல்வத்து ஹிரிபிட்டியவில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் T-56 ஆயுதத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
காரில் வந்த இனந்தெரியாத நால்வர் பிக்குவை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பிக்கு உயிரிழந்துள்ளார்.