தம்பியை கொலை செய்த அண்ணன் தப்பியோட்டம்; பொலிஸார் வலைவீச்சு
இந்தக் கொலையைச் செய்த சந்தேகநபரின் மூத்த சகோதரர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.

எலபாத்த, அலுபத்கல பிரதேசத்தில் மூத்த சகோதரர் இளைய சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
நேற்று (7) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் அலுபத்கல, உதநிரியல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் மூத்த சகோதரனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் மரணம் ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், இந்தக் கொலையைச் செய்த சந்தேகநபரின் மூத்த சகோதரர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அலபத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.