இன்று வெளிநாடு செல்ல இருந்தவர் லாரி மோதி பலி
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சான் கோடு பகுதியை சேர்ந்த முரளி (வயது35) என்பர் வெளிநாட்டில் கொத்தனாராக பணிபுரிந்து வந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சான் கோடு பகுதியை சேர்ந்த முரளி (வயது35) என்பர் வெளிநாட்டில் கொத்தனாராக பணிபுரிந்து வந்தார்.
விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த முரளி இன்று (சனிக்கிழமை) காலையில் வெளிநாட்டிற்கு செல்லவிருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு மனைவி மற்றும் குழந்தைகளுக்கு பிரியாணி வாங்குவதற்காக வீட்டில் இருந்து மார்த்தாண்டம் சென்றார்.
மார்த்தாண்டத்தில் இருந்து பிரியாணி வாங்கிவிட்டு குழித்துறை சந்திப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த கனிமவள லாரி மோதியது.
இதில் முரளி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.