நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு!
மாவனெல்ல - இஹல கோட்டே ரயில் நிலையத்திற்கு அருகில் மியன்எல்ல நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்த 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.

மாவனெல்ல - இஹல கோட்டே ரயில் நிலையத்திற்கு அருகில் மியன்எல்ல நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்த 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.
குண்டசாலை - பன்சலவத்தை பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன், 8 பேருடன் மியான்எல்லவுக்குச் சென்றிருந்த வேளையில் நேற்று மதியம் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த நிலையில், மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்ததாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.