கொழும்பு - தெமட்டகொடையில் குண்டு தாக்குதல்
தெமட்டகொடை, வேலுவன பிரதேசத்தில் உள்ள வீட்டின் மீது இன்று (12) இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றக்குழுவை சேர்ந்தவர் என்று கூறப்படும் தெமட்டகொடை ருவானின் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெமட்டகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெமட்டகொடை, வேலுவன பிரதேசத்தில் உள்ள வீட்டின் மீது இன்று (12) இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த நபரின் வீட்டின் முன் வாசலில் இரண்டு வெடிகுண்டுகளும் அவருடைய தோட்டத்தில் ஒரு வெடிகுண்டும் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட தெமட்டகொடை ருவன் தற்போது புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெமட்டகொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.