கூல் செய்த கூல் சுரேஷ்... வச்சி செஞ்சிடுவாங்க.. அச்சத்தில் விஷ்ணு!
தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில், பிபி சூப்பர்மார்க்கெட்டில் விஷ்ணு மற்றும் கூல் சுரேஷ் இருவரும் ஷாப்பிங் செய்கின்றனர்.

விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 சீசன்களை நிறைவு செய்து தற்போது 7வது சீசனில் இந்த நிகழ்ச்சி ரசிகர்களை கவரும்வகையில் அடுத்தடுத்த டாஸ்க்குகள், பிரச்சினைகள், சர்ச்சைகள், விவாதங்கள், மனக்கசப்புக்களுடன் நடைபோட்டு வருகிறது.
நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தரமற்று நடந்துக் கொள்வதாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவரும் கமல்ஹாசனே கூறியதை நேற்றைய எபிசோட்களில் பார்க்க முடிந்தது.
இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் நிக்சன் மற்றும் அர்ச்சனா விவகாரம் மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் நிக்சனுக்கு ஸ்ட்ரைக் கார்ட் கொடுத்த கமல்ஹாசன், அர்ச்சனாவையும் தாளித்து எடுத்ததை பார்க்க முடிந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் நாமினேஷன் பிராசஸ் நடந்தது. இதுகுறித்து முதல் பிரமோவில் காட்டப்பட்டது. இன்றைய தினம் நிகழ்ச்சி 71வது நாளில் என்ட்ரி கொடுத்த நிலையில் அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனிடையே முதல் பிரமோவில் அர்ச்சனா, நிக்சனை நாமினேட் செய்ததை பார்க்க முடிந்தது. இதற்கான காரணம் அனைவருக்கும் தெரிந்ததுதான் என்றும் அவர் கூறினார். பிரமோவில் தொடர்ந்து பேசிய விசித்ரா, தனக்கும் தினேஷிற்கும் ஆகாது என்பதால் அவரை நாமினேட் செய்வதாக கூறியுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த போட்டியாளர்கள் தங்களது நாமினேஷனை இந்த நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க: விஜய் அம்மா வெளியிட்ட Just Looking like a wow.. ரீல்ஸ் வீடியோ!
இதனிடையே தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில், பிபி சூப்பர்மார்க்கெட்டில் விஷ்ணு மற்றும் கூல் சுரேஷ் இருவரும் ஷாப்பிங் செய்கின்றனர்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் தனக்கு தேவையான பொருட்களை எடுக்க முடியாத விஷ்ணு, பிக்பாஸ் அங்கிருந்து வெளியேறும்படி அறிவுறுத்திய நிலையிலும் இன்னும் சில பொருட்களை எடுக்கிறார். இதையடுத்து யாருக்கும் தெரியாமல் எடுக்கிறீர்களா என்று பிக்பாஸ் கேள்வி எழுப்புகிறார்.
சர்க்கரை எடுக்கவில்லை அதனால் பரவாயில்லை என்று கூல் சுரேஷ் கூற, தொடர்ந்து பேசும் விஷ்ணு, சக ஹவுஸ்மேட்ஸ் தன்னை வைத்து செய்வார்கள் என்று ஆதங்கப்படுகிறார்.
தான் சொல்லிக் கொண்டு கிளம்பவுள்ளதாகவும் அவர் தனது வருத்தத்தை பதிவு செய்வதாக இந்த பிரமோ அமைந்துள்ளது. கடந்த வாரத்தில் கேப்டனாக செயல்பட்ட விஷ்ணு, சரியான அணுகுமுறையை கடைப்பிடிக்கவில்லை என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் தற்போது விஷ்ணு அடுத்தடுத்த சிக்கல்களில் மாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.