இப்படி நடந்ததே இல்லை.. ஏமாற்ற நினைத்த டிராவிட்.... தட்டி கேட்ட நடுவர்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி நிர்வாகம் செய்த தவறு நடுவரால் தட்டிக் கேட்கப்பட்டது. எப்போதுமே ஒரு போட்டியில் பேட்டிங் வரிசை அடிக்கடி மாற்றப்படும்.

ஆகஸ்ட் 5, 2023 - 11:59
இப்படி நடந்ததே இல்லை.. ஏமாற்ற நினைத்த டிராவிட்.... தட்டி கேட்ட நடுவர்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி நிர்வாகம் செய்த தவறு நடுவரால் தட்டிக் கேட்கப்பட்டது. எப்போதுமே ஒரு போட்டியில் பேட்டிங் வரிசை அடிக்கடி மாற்றப்படும்.

டாஸ் போடும்போது பேட்டிங் வரிசை யார் களமிறங்குகிறார்கள் என்று நடுவரிடம் இரு அணிகளும் வழங்குவார்கள். ஆனால் சூழலுக்கு ஏற்ப அந்த பேட்டிங் வரிசையை நாம் தலைக் கீழ் கூட மாற்றிக் கொள்ளலாம்.

அதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது. உதாரணத்திற்கு 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி போட்டியில் யுவராஜ் விளையாட வேண்டிய இடத்தில் தோனி வந்து இறங்கினார். 

இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால் யாரை களம் இறக்கப் போகிறோம் என்பதை முன்கூட்டியே இந்திய அணி நிர்வாகம் முடிவு எடுக்கும். இந்த நிலையில்தான் நேற்றைய ஆட்டத்தில் 20வது ஓவரின் முதல் பந்தில் குல்தீப் யாதவ் ஆட்டம் இழந்தார்.

இதனை அடுத்து ஐந்து பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அடுத்த பேட்ஸ்மேனாக களத்திற்குள் சாஹல் வந்தார். ஆனால் உள்ளே வந்தவுடன் மீண்டும் அவர் வெளியேறினார். 

அவருக்கு பதில் முகேஷ் குமார் களத்துக்கு வர முயன்றார். இதனை பார்த்த நடுவர்கள் இந்தியாவின் இந்த முயற்சிக்கு தடை விதித்தனர். ஒரு பேட்ஸ்மேன் களத்திற்குள் வந்து விட்டால் அவர் வெளியேறக்கூடாது என்ற விதியை சுட்டிக்காட்டி சாஹலை உள்ளே அழைத்தனர்.

சாஹல் முதல் பந்திலே சிங்கிள் அடித்து விட்டு ஆர்ஸ்தீப் சிங்குக்கு வழங்கி அவரும் ஆட்டமிழந்தது வேறு கதை. இந்த முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தி இருக்காது என்றாலும் அடுத்த வீரர் யாரை களம் இறக்குவது என்பது குறித்து கூட முன்கூட்டியே முடிவு எடுக்காமல் இந்திய அணி நிர்வாகம் இருக்கிறது என்பது இந்த ஒரு விஷயம் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

கேப்டனும் பயிற்சியாளரும் முகேஷ் குமாரை தான் களம் இறக்கப் போகிறோம் என்றால் அது சாஹலுக்கு தெரிவித்திருக்க வேண்டாமா இந்த சிறு விஷயத்தில் கூட கோட்டை விட்டதன் மூலம் இந்திய அணியில் எப்படி விஷயம் பரிமாறப்படுகிறது என்று இந்த சம்பவம் ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது. 

வீரர்களிடையே சரியான தொடர்பு இல்லாததால் தான் இந்த ஒரு அவமானம் நேற்று இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!