சகோதரி பவதாரணியின் உடலைப் பார்க்க கொழும்புக்கு வந்துள்ள யுவன் சங்கர் ராஜா
இளைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி நேற்று திடீரென உயிரிழந்தார்.

இளைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி நேற்று திடீரென உயிரிழந்தார்.
இந்த நிலையில், அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட குழுவினர் இன்று (26) காலை இலங்கைக்கு வந்துள்ளனர்.
தற்போது பாடகி பவதாரணியின் உடல் வைக்கப்பட்டுள்ள கொழும்பில் உள்ள மலர்சாலைக்கு அவர் வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இளையராஜாவின் மகள் பிரபல பாடகி பவதாரணி திடீர் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாடகி பவதாரணி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று மாலை திடீரென உயிரிழந்தார்.
இதேவேளை, இசை நிகழ்ச்சிக்காக இலங்கைக்கு வருகைத் தந்திருந்த இசைஞானி இளையராஜா உடனடியாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு விரைந்தார்.
தன் பின்னர் பவதாரணியின் உடல் கொழும்பில் உள்ள மலர் சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.