இளையராஜாவின் மகள் பிரபல பாடகி பவதாரணி திடீர் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி!
பின்னணி பாடகி பவதாரிணிக்கு வயது 47. கேன்சர் பாதிப்பால் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பின்னணி பாடகி பவதாரிணிக்கு வயது 47. புற்றுநோய் பாதிப்பால் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பவதாரிணி ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இந்நிலையில், இலங்கையில் தற்போது அவர் காலமாகியுள்ளார்.
கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்தவர். இன்று மாலை 5. 20 மணிக்கு மரணம் அடைந்தார். இவரது உடல் நாளை மாலை சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
பாவதாரிணியின் கணவர் ஓட்டல் தொழில் செய்கிறார். தம்பதிக்கு குழந்தை இல்லை.
ராமன் அப்துல்லா புதிய கீதை உள்ளிட்ட படங்களில் பவதாரிணி பாடல்களை பாடியுள்ளார். பாரதி படத்தில் அவர் பாடிய ஒரு பாடலுக்காக தேசிய விருது வாங்கினார்.
பின்னணி பாடகியாக மட்டும் அல்லாது பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு பவதாரிணி இசையமைத்துள்ளார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை, இசை நிகழ்ச்சிக்காக இசைஞானி இளையராஜா கொழும்பு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.