இலங்கையை வந்தடைந்தார் இசைஞானி இளையராஜா

பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா மற்றும் தென்னிந்திய பாடகர்கள் அடங்கிய குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

ஜனவரி 25, 2024 - 12:17
ஜனவரி 25, 2024 - 12:20
இலங்கையை வந்தடைந்தார் இசைஞானி இளையராஜா

பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா மற்றும் தென்னிந்திய பாடகர்கள் அடங்கிய குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் நேற்று (24) மாலை கொழும்பை வந்தடைந்தனர்.

கொழும்பில் இன்று(25) இடம்பெறவுள்ள இசை நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்காகவே அவர்கள் வந்துள்ளனர்.

இதனையடுத்து, இளையராஜா உள்ளிட்ட குழுவினருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் கருத்து வெளியிட்ட இசைஞானி இளையராஜா, ''நான் இசையோடு தான் இலங்கை வந்திருக்கின்றேன். இலங்கை தமிழர்கள் எல்லோரும் எனக்கு இரசிகர்கள் தானே. அதுவே எனக்கு போதும். இது கடவுள் கொடுத்த வரம்.'' என கூறியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!