இலங்கையை மிரள வைத்த பங்களாதேஷ்.. பட்டையை கிளப்பிய ஷகிபுல் ஹசன் படை
உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பலம் வாய்ந்த இலங்கை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வீழ்த்தி இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பலம் வாய்ந்த இலங்கை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வீழ்த்தி இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டம் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது.
இதில் கவுஹாத்தியில் நடைபெற்ற முதல் பயிற்சி ஆட்டத்தில் இலங்கையும் பங்களாதேஷ் அணியும் பலபரிட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் குஷல் பெரேரா 34 ரன்களில் ரிட்டையர்டு ஹர்ட் ஆனார். குசல் மெண்டிஸ் 22 ரன்களிலும் சமர விக்கிரம இரண்டு ரன்களிலும் ஆட்டம் இழக்க தொடக்கவீரர் நிஷாங்க மட்டும் பொறுமையாக விளையாடி 68 ரன்கள் சேர்த்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அசலங்கா 18 ரன்களில் வெளியேற தனஞ்செய் டி சில்வா மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து பெவிலியின் திரும்பினார்.
கேப்டன் சனக்க 3 ரன்களிலும், கருணரத்தன 18 ரன்களிலும் வெளியேறினர். இதனால் இலங்கை அணி 49 புள்ளி ஒரு ஓவரில் 263 ரன்களை மட்டுமே எடுத்தது.
பங்களாதேஷ் பந்துவீச்சில் மெஹதி ஹசன் மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். இதனை அடுத்து 264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் இளம் வீரர் தன்சித் ஹசன் அபாரமாக விளையாடி 84 ரன்கள் சேர்த்தார்.
இதே போன்று அனுபவ வீரர் லிட்டன் தாஸ் 6 ரன்களிலும் ஆட்டத்தில் கேப்டனாக களம் இறங்கிய மெஹதி ஹசன் 67 ரன்களும் எடுக்க இறுதியில் முஸ்பிகுர் ரஹீம் 43 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார்.
இதன் மூலம் பங்களாதேஷ் அணி 42 ஓவர்கள் எல்லாம் இலங்கை நிர்ணயித்த இலக்கை மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது.
இதிலும் பங்களாதேஷ் அணியில் ஷகிபுல் ஹசன், மொஹமதுல்லா போன்ற வீரர்கள் பேட்டிங் செய்யவே வரவில்லை. இதன் மூலம் பங்களாதேஷ் அணி இந்த தொடரில் பெரிய ஷாக்கை கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.