பகிடிவதையில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை
23, 24 மற்றும் 25 வயதுடைய இந்த மாணவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று (29) பிற்பகல் பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவியை பகிடிவதை செய்த 6 மாணவர்கள் கைது!
புதிய மாணவர்களை சித்திரவதை செய்தமை தொடர்பில்கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தப் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் மற்றும் மொழிக் கல்வி பீடத்தின் நான்காம் வருட மாணவர்கள் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
23, 24 மற்றும் 25 வயதுடைய இந்த மாணவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.