பல்கலைக்கழக மாணவியை பகிடிவதை செய்த 6 மாணவர்கள் கைது!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவரை பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழகத்தின் 04ஆம் வருட மாணவர்கள் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி 29, 2024 - 12:16
பல்கலைக்கழக மாணவியை பகிடிவதை செய்த 6 மாணவர்கள் கைது!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவரை பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழகத்தின் 04ஆம் வருட மாணவர்கள் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில், கடந்த 14ஆம் திகதி 1997 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சமனலவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

சந்தேகத்திற்குரிய மாணவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழிக் கல்வி பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (28) சமனலவெவ பொலிஸ் நிலையத்திற்கு வந்த அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் 23, 24 மற்றும் 25 வயதுடைய மொரவக, ருக்கஹவில, அலுஹ்தரம, இமதுவ மற்றும் கிதலவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!