அடுத்த வாரம் முதல் அஸ்வெசும கொடுப்பனவு - அறிவிப்பு வெளியானது!
2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்திற்கான அமைச்சுக்களின் செலவின முன்மொழிவுகள் மீளாய்வு நாளை (28) முதல் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும கொடுப்பனவு
2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்திற்கான அமைச்சுக்களின் செலவின முன்மொழிவுகள் மீளாய்வு நாளை (28) முதல் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சின் செயலாளரின் தலைமையில் அந்தந்த அமைச்சுகளுக்குப் பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த வருட வரவு - செலவுத் திட்டம் சவாலான ஒன்றாக இருக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, விசேட தேவையுடையவர்கள், முதியோர் உதவித்தொகை, சிறுநீரக நோய் மானியம், சமுர்த்தி, அஸ்வெசும போன்ற அனைத்து மக்களுக்கும் முதற்கட்ட நன்மைகள் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.
அஸ்வெசும கொடுப்பனவுகளுக்காக 5.4 பில்லியன் ரூபாயும், விசேட தேவையுடையவர்கள், முதியோர் கொடுப்பனவுகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு 1.8 பில்லியன் ரூபாயும், மேன்முறையீட்டு மனுக்கள் காரணத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்காக 1.2 பில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேன்முறையீடுகள் விசாரிக்கப்படும் குடும்ப அலகுகளின் எண்ணிக்கை 396,000 என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
புதிய நலன்புரி வாரியத் தலைவரை நியமிக்கும் பணி சில சட்டச் சூழலால் தாமதமாகி தற்போது புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி, திறைசேரி பணத்தை ஒதுக்கியுள்ளதாக கூறிய அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, எதிர்வரும் வாரத்தில் இருந்து கொடுப்பனவுகள் வழங்கப்படும் என வலியுறுத்துகின்றார்.