அஸ்வெசும கொடுப்பனவு வைப்பிலிடப்பட்டது: மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்
அஸ்வெசும கொடுப்பனவு: கொடுப்பனவாக 8,793 மில்லியன் ரூபாய், மக்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு
அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் டிசெம்பர் மாதத்துக்கான கொடுப்பனவு, பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
கொடுப்பனவாக 8,793 மில்லியன் ரூபாய், மக்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பதிவு செய்யப்பட்ட 1,410,064 அஸ்வெசும பயனாளிகளுக்கு இந்தப் பணம் வழங்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
இதேவேளை, கடந்த ஜூலை முதல் டிசெம்பர் வரையிலான காலப்பகுதியில் அஸ்வெசும பயனாளிகளுக்கு 51,967 மில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அஸ்வெசும பயனாளர்களில், 303,199 குடும்பங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பங்கள், 606,496 குடும்பங்கள் ஏழ்மையான குடும்பங்கள், 290,624 குடும்பங்கள் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் மற்றும் 209,745 நடுத்தர குடும்பங்கள் என இனங்காணப்பட்டுள்ளன.