ஆசிய கோப்பை இறுதிப்போட்டி - நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடக்கிறது.

செப்டெம்பர் 17, 2023 - 18:25
செப்டெம்பர் 17, 2023 - 18:28
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி - நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடக்கிறது.

இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா, தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் ஆசிய கோப்பையை கைப்பற்றி இருந்தது. நடப்பு தொடரில் இந்திய அணி சிறப்பாகவே ஆடி வருகிறது.

லீக் சுற்றில் நேபாளம், சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கையை வீழ்த்தி இருந்தது. வங்காளதேசத்திடம் மட்டும் தோற்று இருந்தது. இலங்கையை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும். 

பேட்டிங்கில் சுப்மன் கில் (275 ரன்), லோகேஷ் ராகுல் (169 ரன்), விராட் கோலி (129 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ் (9 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (6 விக்கெட்), ஷர்துல் தாக்கூர் (5 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

இதேபோல், நடப்பு சாம்பியனான இலங்கை அணி 7-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லும் வேட்கையில் இருக்கிறது. அந்த அணி 1986, 1997, 2004, 2008, 2014, 2022-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது. 

இலங்கை அணியின் பேட்டிங்கில் குஷால் மெண்டீஸ் (253 ரன்), சமர வீரா (215 ரன்) ஆகியோரும், பந்துவீச்சில் பதிரனா (11 விக்கெட்டும்), நெதமிகா வெல்லலகே (10 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளும் இன்று மோதுவது 167-வது ஆட்டமாகும்.

இதுவரை நடந்த 166 போட்டியில் இந்தியா 97-ல், இலங்கை 57-ல் வெற்றி பெற்றுள்ளனர். 11 போட்டி முடிவு இல்லை. ஒரு ஆட்டம் 'டை' ஆனது.

இன்றைய போட்டி இலங்கை நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய தேர்வு செய்துள்ளது.

அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்குகிறது. இந்திய அணி பந்து வீச உள்ளது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!