முதல் பந்திலேயே விக்கெட்.. வோக்ஸ் வேகத்தில் சிதறிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்!

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

Jul 20, 2023 - 19:54
முதல் பந்திலேயே விக்கெட்.. வோக்ஸ் வேகத்தில் சிதறிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்!

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்கள் சேர்த்தது. மிட்செல் ஸ்டார் 23 ரன்களுடனும், பேட் கம்மின்ஸ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது.

அதில் இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் வீசிய பந்திலேயே கம்மின்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் ஸ்டார் சில பவுண்டரிகளை விளாசினார். ஆனால் வோக்ஸ் வேகத்தில் ஹேசல்வுட் ஸ்லிப் திசையில் கேட் கொடுத்து 4 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 

இறுதியாக ஆஸ்திரேலிய அணி 317 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. கடைசி வரை போராடிய ஸ்டார்ட் ஆட்டமிழக்காமல் 36 ரன்களை விளாசினார்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் லபுஷேன் மற்றும் மிட்செல் மார்ஷ் தலா 51 ரன்கள் விளாசினர். அதேபோல் இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

இந்தியாவுக்கு சாதகமாக விழுந்த டாஸ்.. ரோகித் செய்த மாற்றம் .. அறிமுகமாகும் புயல்!

ஆஷஸ் தொடரில் கிறிஸ் வோக்ஸ் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

தற்போது 4வது போட்டியில் வோக்ஸின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நடப்பு ஆஷஸ் தொடரில் 3 இன்னிங்ஸ்களில் 11 விக்கெட்டுகளை வோக்ஸ் சாய்த்துள்ளார். 

இங்கிலாந்து அணி பிளாட் பிட்ச்களை அமைத்து வரும் நிலையில், வோக்ஸின் அதிவேகம் + ஸ்விங் பாணியிலான பந்துவீச்சு இங்கிலாந்து அணிக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.