மாணவர் சேர்க்கை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்றிக்கை

பாடசாலைகளுக்கு மாணவர் சேர்க்கை தொடர்பில் கல்வி அமைச்சினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Feb 19, 2024 - 14:52
மாணவர் சேர்க்கை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்றிக்கை

பாடசாலைகளுக்கு மாணவர் சேர்க்கை தொடர்பில் கல்வி அமைச்சினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாடசாலை அதிபர்கள் நேர்முகப்பரீட்சை நடத்தி மாணவர்களை சேர்த்துக் கொள்வார்கள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே பாடசாலைகளில் ஆறாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

2024 ஆம் ஆண்டில், தரம் 1, 5 மற்றும் 6 தவிர இடைநிலை வகுப்புகளுக்கு க.பொ.த (உயர்தரம் உட்பட) மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட வேண்டும்.

அந்த பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருந்தால், அதிபர்களால் கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின்படி நேர்காணல்கள் நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் கல்வி அமைச்சின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.

அத்துடன், பாடசாலைகளுக்கான மாணவர் சேர்க்கை கடிதங்களை கல்வி அமைச்சு  வெளியிடாது எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.