அஸ்வெசும புதிய விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்துக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
உரிய முறையில் விண்ணப்பங்களை அனுப்ப முடியாதவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி மீண்டும் விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.