முட்டை விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
வர்த்தகர்கள், மக்களை சுரண்டும் நிலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் ஒரு முட்டைக்கான உற்பத்தி செலவு சுமார் 30 ரூபாய் என்ற போதும், மக்கள் அதனை 60ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலையே காணப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வர்த்தகர்கள், மக்களை சுரண்டும் நிலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன்படி, அடுத்த வாரம் முதல், நியாயமான அதிகபட்ச சில்லறை விலையில் மக்கள், முட்டையை கொள்வனவு செய்வதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.