இந்த வாரம்  பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போவது யார் தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.

ஜனவரி 5, 2023 - 20:30

ஆரம்பமே மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம் மணிகண்டன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் விக்ரமன், ஏடிகே, கதிரவன், மைனா, ஷிவின், ரக்ஷிதா மற்றும் அமுதவாணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். 

இந்த வாரத்தில் நான்கு நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை பதிவாகியுள்ள ஓட்டுக்களின் படி அமுதவாணன் தான் மிகக் குறைந்த ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அவருக்கு அடுத்ததாக ரக்ஷிதா குறைந்து ஓட்டுக்களை பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த வாரம் அமுதவாணன் வெளியேறவே அதிக வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு கட்டத்தில் முதல் ஆளாக சேவ் ஆன அமுதவாணனுக்கா இப்படி ஒரு நிலைமை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!