மத்திய மாகாண பாடசாலைகள் அனைத்தும் இரு நாட்கள் மூடப்படுகின்றன

மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதுடன், சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

டிசம்பர் 18, 2025 - 18:59
மத்திய மாகாண பாடசாலைகள் அனைத்தும் இரு நாட்கள் மூடப்படுகின்றன

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை வெள்ளிக்கிழமை (19) மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை (22) ஆகிய இரு நாட்களும் மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் மதுபாணி பியசேன தெரிவித்தார். 

தற்போது நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதுடன், சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளுக்கு, இடம்பெயர வேண்டிய சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை மட்டம் 3 (வெளியேறுங்கள் – சிவப்பு) அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (18) அதிகாலை 2.30 மணிக்கு விடுக்கப்பட்டதுடன், நாளை (19) அதிகாலை 2.30 மணி வரை 24 மணித்தியாலங்கள் செல்லுபடியாகும் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையிலேயே, மத்திய மாகாண பாடசாலைகள் அனைத்தும் இரு நாட்கள் மூடப்படுகின்றன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!