அனைத்து பாடசாலைகளும் நாளை விடுமுறை
இலங்கை முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.
இலங்கை முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாளை (ஜூன் 03) பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்க மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.