அஜித் 63 படத்தை இயக்கப்போவது இவரா? வெளியான ஹாட் நியூஸ்!

அஜித் அடுத்தடுத்த இயக்குனர்களை தேர்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 1, 2022 - 00:28
ஏப்ரல் 1, 2022 - 00:28
அஜித் 63 படத்தை இயக்கப்போவது இவரா? வெளியான ஹாட் நியூஸ்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் வெளியாக உள்ளது. 

அதனைத் தொடர்ந்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க அனிருத் இசையமைக்கிறார்.

அதன் பின்னர் தல அஜித் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்பது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் தற்போதிலிருந்தே வலம்வரத் தொடங்கி உள்ளேன்.

அதாவது 8 தோட்டக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் என்பவர் இந்த படத்தை இயக்க இருப்பதாக மதுரையை பின்னணியாக கொண்ட திரைப் படமாக இது உருவாக இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.
 
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஒருவேளை இந்த கூட்டணி உறுதியானால் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!