பொலிஸ் புத்தகத்தில் குறிப்பு எழுதிவிட்டு மாயமான அதிகாரிக்கு வலைவீச்சு!
பொலிஸ் புத்தகத்தில் குறிப்பு எழுதிவிட்டு பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர், கடந்த மூன்று நாட்களாக சேவைக்கு சமூகமளிக்காத நிலையில், அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து கடமையாற்றுவது கடினம் என குறித்த பிரதான பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் புத்தகத்தில் குறிப்பு எழுதிவிட்டு பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரியை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணையில் உளவுத்துறை அதிகாரிகளும் களமிறக்கப்படுவதாக பொலிஸ் வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன.
குறித்த பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பில் நேற்று வரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் பதவியேற்று கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியதுடன், பின்னர் தம்புத்தேகம தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.