அரையிறுதியில் நுழைந்தது ஆப்கானிஸ்தான்; உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது ஆஸி!
இதனிடையே மழை குறிக்கிட்டதால், டிஎல்எஸ் விதிப்படி 19 ஓவர்களில் 114 ரன்கள் பங்களாதேஷ் அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டிக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்று சாதித்துள்ளது.
சூப்பர் 8 போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனிடையே மழை குறிக்கிட்டதால், டிஎல்எஸ் விதிப்படி 19 ஓவர்களில் 114 ரன்கள் பங்களாதேஷ் அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே பங்களாதேஷ் அணி பெற்று தோல்வியை சந்தித்தது.
8 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
சூப்பர் 8 சுற்றில் குரூப் 2-ல் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளும் குரூப் 1-ல் இந்தியாவும் ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டd.
குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா விளையாடிய 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆப்கானிஸ்தான் அணி இன்று இரண்டாவது வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
வருகின்ற வியாழக்கிழமை நடைபெறும் முதல் அரையிறுதியில் காலை 6 மணிக்கு தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும், இரண்டாவது அரையிறுதியில் இரவு 8 மணிக்கு இந்தியா, இங்கிலாந்தும் மோதுகின்றன.