உயர்தரப் பரீட்சை திகதிகள் அறிவிக்கப்பட்டது
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பொன்றை விடுத்து இதனை அறிவித்துள்ளார்.
நாட்டில் பல பாடசாலைகளுக்கு இரண்டு நாள் விடுமுறை
எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல்( 2024.01.04) ஜனவரி மாதம் 31ஆம்(2024.01.31) திகதி வரை பரீட்சைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக, 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசெம்பர் 2 ஆம் திகதி வரை நடைபெறவிருந்தன.
இந்த நிலையில், மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என தெரிவித்து பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.