14 கிலோ தங்கத்துடன் தமிழ் நடிகை கைது.. சிக்கியது எப்படி? 

தமிழ் திரைப்பட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 5, 2025 - 18:39
14 கிலோ தங்கத்துடன் தமிழ் நடிகை கைது.. சிக்கியது எப்படி? 

தமிழ் திரைப்பட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவை சேர்ந்த நடிகை ரன்யா ராவ், விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்த “வாகா” படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இந்நிலையில் துபாயில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் வந்த அவர் தனது உடலில் அதிகப்படியான நகையை அணிந்திருந்தார். 

இதனால் சந்தேகம் அடைந்த வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அவரை விசாரித்தனர்.

அத்துடன், விமான நிலையத்தில் அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது உடைமைக்கு நடுவே தங்கக்கட்டிகள் இருப்பதும் தெரியவந்தது. 

அதோடு அவர் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தங்கநகை, தங்க பிஸ்கட் எடுத்து வந்ததும் தெரியவந்தது.

அதையடுத்து அவரிடம் இருந்த சுமார் 14 கிலோ மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

கடந்த 15 நாட்களில் மட்டும் ரன்யா ராவ் 4 முறை துபாய் சென்று வந்ததாகவும் அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டே இந்த சோதனை நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!