நடிகை ‘திவ்யா ஸ்பந்தனா’ மாரடைப்பால் மரணம்? உண்மை இதோ!

தமிழ் மற்றும் கர்நாடக திரைத்துறையின் இளம் நடிகையாக வலம் வந்த ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா ஆவார். இதன் பின் இவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 

செப்டெம்பர் 6, 2023 - 16:25
நடிகை ‘திவ்யா ஸ்பந்தனா’ மாரடைப்பால் மரணம்? உண்மை இதோ!

தமிழ் மற்றும் கர்நாடக திரைத்துறையின் இளம் நடிகையாக வலம் வந்த ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா ஆவார். இதன் பின் இவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 

2012 இல் இந்திய இளைஞர் காங்கிரஸில் இணைந்த இவர் 2013 இல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் திடீரென அவர் மாரடைப்பால் காலமானார் என்று ஒரு பொய்யான செய்தியை பரவ தொடங்கியுள்ளது. இதனையடுத்து உண்மையை ஆராய்ந்தபோது, அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். 

தற்போது அவர் ஜெனிவாவில் இருக்கிறார் என்றும், நிம்மதியாக தனது விடுமுறையை வெளிநாட்டில் கழித்து வருவதாக பத்திரிகையாளர் ஒருவர் தொலைபேசி மூலம் நடிகை திவ்யா ஸ்பந்தனாவை அழைத்து பேசியுள்ளார்.

இதனை பகிர்ந்து கொண்ட அவர், மேலும், இது பொய்யான செய்தி என்றும், யாரும் இந்த வதந்தியை பரப்ப வேண்டாம் என்று சமூக வலைத்தளங்களில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பொய்யான செய்தியை பரப்பியவர்கள் வெக்க பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

வாரணம் ஆயிரம், பொல்லாதவன் திரைப்படத்தில் அடித்து தமிழ் சினிமாவில் மிகவும் ரம்யா (திவ்யா ஸ்பந்தனா)  பிரபலமானார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!