பிக் பாஸ் 8வது சீசன்: நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளர்!
உலக அளவில் மிகுந்த பிரபலமடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்தியாவின் பல மொழிகளிலும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

உலக அளவில் மிகுந்த பிரபலமடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்தியாவின் பல மொழிகளிலும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
தமிழில் இந்த நிகழ்ச்சி 2016ஆம் ஆண்டு முதல் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, அதன் தொடக்க காலம் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
கமல்ஹாசன் வெறும் பொழுதுபோக்குக்கான நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல், பல சினிமா அனுபவங்களையும் புத்தகங்களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வந்தார்.
கடந்த 7 ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசன், சமீபத்தில் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனால், கமல்ஹாசனுக்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
அந்நிலையில், பிக் பாஸ் 8வது சீசனின் தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பிக் பாஸ் 8வது சீசனின் டீசரை வெளியிட்டு, விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
முதல் முறையாக விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என்பதால், 8வது சீசன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.