டி.ராஜேந்தர் தாடிக்கு பின் உள்ள காரணம் இதுதான்; ரகசியத்தை வெளியிட்ட நடிகர்
இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரின் தாடிக்கு பின்னால் இருக்கும் ரகசியத்தை நடிகர் தியாகு பகிர்ந்துள்ளார்.

இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரின் தாடிக்கு பின்னால் இருக்கும் ரகசியத்தை நடிகர் தியாகு பகிர்ந்துள்ளார்.
இயக்கம், நடிப்பு, இசை என தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞராக வலம் வருபவர் டி.ராஜேந்தர். இவரது மகன் தான் நடிகர் சிம்பு.
மயிலாடுதுறையை பூர்வீகமாகக் கொண்ட ராஜேந்தர் ஏ.வி.சி கல்லூரியில் எம்.ஏ படித்தவர். பின்னர் 1980களில் ஒருதலை ராகம் என்ற கதையை எழுதினார் டி.ராஜேந்தர்.
படத்தை இப்ராஹிம் தயாரித்து இயக்கினார். டி.ராஜேந்தர் இசையமைத்த அந்தப் படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்டடித்தது.
ஒருதலை ராகம் படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு, வசந்த அழைப்புகள், ரயில் பயணங்களில், உயிருள்ள வரை உஷா, தங்கைக்கு ஓர் கீதம், உறவை காத்த கிளி, மைதிலி என்னை காதலி, என் தங்கை கல்யாணி உள்ளிட்ட பிளாக் பாஸ்டர் படங்களை கொடுத்தார் டி.ராஜேந்தர்.
அவர் எழுதி இயக்கிய அத்தனை படங்களும் காதலையும், உறவுகளையும் மையப்படுத்தி குடும்பங்கள் கொண்டாடும் படைப்புகளாக இருந்தது. இயக்கம் மட்டுமல்லாமல், நடிப்பு, இசை, பாடல்கள் எழுதுவது என பல திறமைகளையும் வெளிப்படுத்தியவர் டி.ராஜேந்தர்.
பன்முக கலைஞர் என்ற அடையாளத்துடன் டி.ராஜேந்தருக்கு இருக்கும் மற்றொரு அடையாளம் அவரது தாடி. சினிமாவில் இருப்பவர்கள் தாடி வைப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் டி.ராஜேந்தர் பல வருடங்கள் தாடியை எடுக்காமலே இருக்கிறார்.
இத்தனை வருடங்கள் டி.ஆர். தாடி எடுக்காமல் இருப்பதற்கு காரணம் என பலர் யோசித்ததுண்டு. இந்தச் சூழலில் டி.ராஜேந்தர் தாடி வைத்ததற்கான காரணம் குறித்து நடிகர் தியாகு பேசியிருக்கிறார்.
நடிகர் தியாகு சமீபத்தில் அளித்த பேட்டியில், ”டி.ராஜேந்தர் தாடி வளர்க்க காதல் தோல்விதான் காரணம். மயிலாடுதுறையில் தான் வசித்த தெருவில் இருந்த உஷா என்பவரை டி.ராஜேந்தர் காதலித்தார். உஷாவும் காதலிக்கத்தான் செய்தார்.
ஆனால் இருவரது வீட்டிலும் காதலுக்கு சம்மதம் கிடைக்கவில்லை. அதன் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டார்கள். அந்தக் காதல் தோல்வியால்தான் டி.ராஜேந்தர் இன்றுவரை தாடி வைத்துக்கொண்டிருக்கிறார்” என்று கூறினார். இந்தப் பேட்டியைப் பார்த்த ரசிகர்கள் டி.ஆருக்கு இவ்வளவு பெரிய சோகம் இருக்கிறதா என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.