நடிகர் சத்யராஜின் தாயார் காலமானார்.. ரசிகர்கள் இரங்கல்!

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் (வயது 94) இவர் கோவையில் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக இவர் இன்று (ஆகஸ்ட் 11) மாலை 4 மணியளவில் காலமானார். 

ஆகஸ்ட் 11, 2023 - 23:18
ஆகஸ்ட் 11, 2023 - 23:18
நடிகர் சத்யராஜின் தாயார் காலமானார்.. ரசிகர்கள் இரங்கல்!

இந்திய திரையுலகில் ஆகசிறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் சத்யராஜ். 1978 ல் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான ‘சட்டம் என் கையில்’ படத்தில் அறிமுகமான இவர் அதன் பின் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வில்லனாகவும் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். 

அதன்பின்  1985 ல் வெளியான சாவி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து ஹீரோவாகவும் வில்லனாகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர் சத்ய ராஜ் அதன்பின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்தார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் திரையுலகில் கவனம் பெற்றார்.

பல தசாப்தங்களுக்கு முன் தொடங்கி இன்று வரை கதாபாத்திரத்தை கச்சிதாமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி அந்தஸ்தை பெற்று வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல மொழிகளில் பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் நடிகர் சத்யராஜின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானார். தயார் நாதாம்பாள் காளிங்கராயர் (வயது 94) இவர் கோவையில் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக இவர் இன்று (ஆகஸ்ட் 11) மாலை 4 மணியளவில் காலமானார். 

நாதம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தாய் இறந்த செய்தியறிந்து உடனடியாக ஹைதராபாத்தில் ஒரு படப்பிடிப்பில் நடித்து கொண்டிருந்த நடிகர் சத்யராஜ் தற்போது கோவை விரைந்துள்ளார். நடிகர் சத்யராஜின் தாயார் மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!