சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நடிகர் அஜித்
கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் அஜித்குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் அஜித்குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவரது காதுக்கு கீழ் பகுதியில் இருந்த கட்டி கண்டறியப்பட்டு அரை மணிநேரத்தில் நவீன சிகிச்கையின் மூலம் டாக்டர்கள் அகற்றினர்.
இந்நிலையில், நடிகர் அஜித் சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த வாரம் வெளிநாட்டில் நடக்கும் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு நடிகர் அஜித் செல்ல உள்ளார் என்றும் கூறியுள்ளார்.