அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த மருந்துகள் கிடைப்பதற்கு, 100 நாட்கள் அளவில் எடுக்கும் என்றார்.

ஏப்ரல் 23, 2022 - 10:48
அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள 186 மருந்துப் பொருட்களுக்காக, 19.2 மில்லியன் டொலர் நாணயக் கடிதத்தை விடுவிக்க முடிந்துள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மருந்துத் தடுப்பாட்டை முகாமைத்துவம் செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த மருந்துகள் கிடைப்பதற்கு, 100 நாட்கள் அளவில் எடுக்கும் என்றார்.

அத்துடன், நாணயக் கடிதம் விடுவிக்கப்பட்டதன் பின்னரே, வெளிநாட்டு உற்பத்தியாளர்கள், இலங்கைக்காக தங்களது உற்பத்திகளை ஆரம்பிப்பர் என்று அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான நிலையில், சில நிறுவனங்களுடன் கலந்துரையாடி அவசர உதவியாக மருத்துப் பொருட்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, உலக சுகாதார ஸ்தாபனம் உட்பட சில நாடுகள் மருந்துப் பொருட்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!