ஹட்டன்- நுவரெலியா வீதியில் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து
ஹட்டன் - நுவரெலியா வீதியில் லிந்துலை பகுதியில் வான் ஒன்று 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் சாரதி உள்ளிட்ட இருவர் படுகாயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் - நுவரெலியா வீதியில் லிந்துலை பகுதியில் வான் ஒன்று 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் சாரதி உள்ளிட்ட இருவர் படுகாயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (26) காலை 5 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக நியூஸ்21 செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
குறித்த வான், டிக்கோயா பகுதியில் இருந்து லிந்துலை மட்டுகலை தோட்டத்துக்கு செல்லும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
வாகனத்தை செலுத்தும் போது விஷப்பூச்சி தன்னை தாக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக சாரதி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
குறித்த விபத்தில் வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.