ரோஹித் ரெக்காடை உடைத்த இளம் வீரர்... ஒரே போட்டியில் 2 வரலாற்று சாதனை!
ஐபிஎல் 2024 தொடரில் 42 சிக்ஸர்கள் அடித்த அபிஷேக் ஷர்மா இப்போட்டியில் 8 சிக்ஸர்கள் அடித்தார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோற்ற நிலையில், 2வது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பதிலடி கொடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 235 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அபிஷேக் சர்மா சதமடித்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் 77 மற்றும் ரிங்கு சிங் 48 ரன்கள் எடுத்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே 18.4 ஓவரில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வேஸ்லி 43, லுக் ஜோங்வே 33 ரன்கள் எடுத்தனர். சதமடித்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
தோனிக்கு டஃப் கொடுக்கும் ரிங்கு சிங்.. மிரள வைக்கும் புள்ளி விபரம்!
அவர் 82 ரன்களில் இருந்த போது 6, 6, 6 என அடுத்தடுத்த ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு சதம் அடித்தார். இதன் ஊடாக, சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்தடுத்த 3 சிக்ஸர்கள் அடித்து சதத் பெற்ற முதல் வீரர் என்று தனித்துவமான உலக சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார்.
முன்னதாக சேவாக் உட்பட பல வீரர்கள் சிக்ஸர் அல்லது 2 அடுத்தடுத்த சிக்ஸர்களை அடித்து சதம் பெற்றனர். ஆனால் அபிஷேக் சர்மா தான் முதல் முறையாக 3 சிக்ஸர்களை அடித்து சதம் பெற்றுள்ளார்.
அத்துடன் ஐபிஎல் 2024 தொடரில் 42 சிக்ஸர்கள் அடித்த அபிஷேக் ஷர்மா இப்போட்டியில் 8 சிக்ஸர்கள் அடித்தார். இதானால், 2024ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார்.
ரோகித் சர்மா இந்த வருடம் 46 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.