அழகிகளை வைத்து விபசாரம் ; பிரபல நடிகை கைது

மும்பையில் பிரபல நடிகையும் காஸ்டிங் டைரக்டருமான ஆர்த்தி மிட்டல் மாடல் அழகிகளை வைத்து விபசாரம் நடத்துவதாக மும்பை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ஏப்ரல் 18, 2023 - 15:30

தகவல் கிடைத்ததும் போலீஸ் அதிகாரி மனோஜ் சுதா ஒரு சிறப்பு படை அமைத்து போலீசார் மாறுவேடத்தில் ஆர்த்தியை அணுகி இரண்டு நண்பர்களுக்கு இரண்டு மாடல் அழகிகள் தேவை என்று கூறி உள்ளனர். ஆர்த்தி 60,000 ரூபாய் கேட்டுள்ளார்.

இதை தொடர்ந்து போலீசார் தீவிர வேட்டை நடத்தினர். இதில் குர்கானில் ஒரு இடத்தில் இருந்து இரண்டு மாடல் அழகிகள் மீட்கப்பட்டு அவர்கள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டனர். 

தலா ரூ.15,000 தருவதாக நடிகை ஆர்த்தி மிட்டல் உறுதியளித்ததாக மாடல் அழகிகள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாமல், வளர்ந்து வரும் இளம் மாடல்களை ஆர்த்தி மிட்டல் விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார். இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!