குட்டியுடன் குழியில் வீழ்ந்த காட்டு யானை - மீட்கப் போனவருக்கு நேர்ந்த அவலம்
குருநாகல் - கல்கமுவ, வேவரனவெடிய பகுதியில் காட்டு யானை அதன் குட்டியுடன் குழிக்குள் வீழ்ந்து கிடந்துள்ளது.

குருநாகல் - கல்கமுவ, வேவரனவெடிய பகுதியில் காட்டு யானை அதன் குட்டியுடன் குழிக்குள் வீழ்ந்து கிடந்துள்ளது.
இதனை கண்ணுற்ற பிரதேச வாசிகள் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து இன்று(08) மதியம் சம்பவ இடத்திற்கு சென்ற கல்கமுவ வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் காட்டு யானை மற்றும் அதன் குட்டியை பாதுகாப்பாக மீட்டெடுக்க முயற்சித்தனர்.
எனினும், குழியிலிருந்து மீண்டு வந்த காட்டு யானை அங்கிருந்த உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியுள்ளது.
இதனால், பலத்த காயமடைந்த அவர் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கல்கமுவ வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, மீட்கப்பட்ட காட்டு யானையும் அதன் குட்டியும் காட்டுக்குள் சென்று விட்டன.