மருதானையில் தடம் புரண்ட ரயில்; நடைமேடையும் பலத்த சேதம்
மருதானை ரயில் நிலையத்தில் இன்று (25) காலை ரயில் தடம் புரண்டது.

மருதானை ரயில் நிலையத்தில் இன்று (25) காலை ரயில் தடம் புரண்டது.
எரிபொருள் ரயிலொன்று தடம் புரண்டுள்ளதுடன், ரயில் நடைமேடையும் பலத்த சேதமடைந்துள்ளது.
இதன்காரணமாக மருதானை ரயில் நிலையத்தின் 1, 2 மற்றும் 3 ஆகிய ரயில் மேடைகள் தடைப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மருதானை ரயில் நிலையம் மற்றும் கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் தாமதத்துடன் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.