இரத்மலானை கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது
இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ரத்மலானையைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேகநபரிடம் இருந்து 10 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 21ஆம் திகதி இரத்மலானை ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள கடையொன்றில் வைத்து நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதேவேளை, நேற்று (24) இரவு ஹெட்டிபொல குருந்துகும்புர சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.