பாடசாலை மதில் சுவர் இடிந்து விழுந்து மாணவி பலி; ஆறு மாணவர்கள் வைத்தியசாலையில்

பாடசாலை ஒன்றில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நவம்பர் 15, 2023 - 17:27
நவம்பர் 16, 2023 - 16:53
பாடசாலை மதில் சுவர் இடிந்து விழுந்து  மாணவி பலி; ஆறு மாணவர்கள் வைத்தியசாலையில்

வெல்லம்பிட்டிய, வேரகொட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த மேலும் 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு மாணவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த ஐந்து மாணவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் ஒரு மாணவர் சிறுவர் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த மாணவி தரம் 1 இல் கல்வி கற்கும் ஆறு வயது என தெரிவிக்கப்படுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!